1. Home
  2. தமிழ்நாடு

தமிழ்நாடு அலங்கார ஊர்திக்கு 3ம் இடம்..!

1

இந்தக் குடியரசு தின விழாவின் போது மாநில அரசுகளின் அலங்கார ஊர்திகளும் இடம் பெறும். கடமை பாதையில் இந்த அலங்கார ஊர்திகள் அணி வகுத்து செல்லும்.இந்த நிலையில், குடியரசு தினவிழாவின் போது தமிழக அரசின் அலங்கார ஊர்தியும் இடம்பெற்றது.
 
தமிழ்நாட்டில் பழங்காலத்தில் இருந்த குடவோலை அமைப்பைப் பெருமைப்படுத்தும் வகையில் அலங்கார ஊர்தி வடிவமைக்கப்பட்டிருந்தது.‘பழந்தமிழ்நாட்டின் குடவோலை முறை – மக்களாட்சியின் தாய்’ என்ற கருப்பொருளின் அடிப்படையில், 10ம் நூற்றாண்டு சோழர் காலக் குடவோலை முறையை மையப்படுத்தி தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தி உருவாக்கப்பட்டு, கடமைப் பாதையில் ஊர்வலம் சென்றது.

இந்நிலையில் குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு அலங்கார ஊர்திக்கு 3ம் இடம் கிடைத்துள்ளது.  முதல் இடத்தை ஒடிசாவும்,  2ஆம் இடத்தை குஜராத்தும் பெற்றன.  (ஜூரி தேர்வில் )


மக்களின் வாக்கு தேர்வின் அடிப்படையில் குஜராத் முதலிடமும், உ.பி. 2ம் இடம்,  ஆந்திராவுக்கு 3ம் இடம் கிடைத்துள்ளது.துறைகள் வாரியான சிறந்த அலங்கார ஊர்தியாக கலாசார துறையின் ஊர்தி தேர்வு செய்யப்பட்டது.

Trending News

Latest News

You May Like