அயலான் படத்தின் ட்ரைலர் வெளியானது..!

ஆர்.ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், ஷரத் கேல்கர், இஷா கோப்பிகர், பானுப்ரியா, யோகி பாபு, கருணாகரன், பால சரவணன் ஆகியோர் நடித்துள்ள படம் அயலான்.
பான் இந்தியா படமாக வெளியாகவுள்ள இப்படத்தில் அதிகளவிலான கிராபிக்ஸ் காட்சிகளும் 4,500-க்கும் மேற்பட்ட விஎஃப்எக்ஸ் காட்சிகளும் கொண்ட இந்திய சினிமாவின் முழு நீள லைவ்-ஆக்சன் திரைப்படமாக உருவாகியுள்ளது. இப்படம் வருகிற ஜன.12 ஆம் தேதி திரைக்கு வருகிறது. சமீபத்தில் இந்த படத்தின் இசைவெளியீட்டு விழா நடைபெற்ற நிலையில், தற்போது இப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது