திடீர் திருப்பம்..! ஹிந்து அமைப்பினருக்கு அனுமதி..!

மதுரை மாநகரில் பிறப்பிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவை ரத்து செய்ய கோரி, ஹிந்துதர்ம பரிஷத் அமைப்பைச் சேர்ந்த சுந்தர வடிவேல் , முருகன் ஆகியோர சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு மீதான விசாரணையை நீதிபதிகள் ஜெயச்சந்திரன், பூர்ணிமா ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று விசாரித்தது. மனுதாரர்கள் மற்றும் அரசு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், இந்து அமைப்பினர் மதுரை, பழங்காநத்தத்தில் போராட்டம் நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டனர். இதனையடுத்து, இன்று மாலை 5 மணியளவில் அங்கு போராட்டம் நடத்த இந்து அமைப்பினர் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது