1. Home
  2. தமிழ்நாடு

மக்களே கவனம்..! இந்த மாதம் வங்கிகள் தொடந்து 4 நாட்கள் இயங்காது..!

1

'வங்கிகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்; வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்த தேவையான ஊழியர்களை நியமிக்க வேண்டும்; தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரப்படுத்த வேண்டும்; பழைய பென்ஷன் திட்டத்தை அனைவருக்கும் அமல்படுத்த வேண்டும்; வங்கிகளுக்கு வாரத்துக்கு ஐந்து நாட்கள் பணி நாளாக அறிவிக்க வேண்டும்' என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதுதொடர்பாக, இந்திய வங்கிகள் சங்கத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததாக, வங்கி ஊழியர்களின் தேசிய கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் எல்.சந்திரசேகர் தெரிவித்தார்.

இதனால், வரும் 24 மற்றும் 25-ஆம் தேதிகளில் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.


 24, 25 தேதிகளில் ஸ்ட்ரைக் அதுக்கு முன்னாடி ரெண்டு நாள்ல ஒரு நாள் நாலாவது சனிக்கிழமை, இன்னொரு நாள் ஞாயிற்றுக்கிழமை. அதனால 23ல இருந்து 25 வரைக்கும் நாலு நாள் வங்கிகள் இயங்காது.

இதன் காரணமாக முக்கியமான வேலை இருந்தா சீக்கிரமா முடித்து கொள்வது நல்லது  

Trending News

Latest News

You May Like

News Hub