அடப்பாவிங்களா..! இப்படி கூட செய்விங்களா..? சிமெண்டால் செய்யப்பட்ட போலி பூண்டு..!
நாடு முழுவதும் பூண்டு விலை உயர்ந்து வரும் நிலையில், சில காய்கறி சந்தைகளில் போலி பூண்டு விற்பனை செய்யப்படுவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு அதிர்ச்சி செய்தி வெளியானது.
மகாராஷ்டிரா மாநிலம் அகோலாவில் உள்ள சந்தையில் கண்டுபிடிக்கப்பட்ட சிமெண்டால் செய்யப்பட்ட போலி பூண்டின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ பொதுமக்களிடையே அச்சத்தை அதிகரித்துள்ளது.