இது தெரியுமா ? ராமர் கோவில் கும்பாபிஷேகம் திரையரங்கில் நேரலையில் பார்க்கலாம்..!

ராமர் கோவில் கும்பாபிஷேக சிறப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்தியாவில் சில மாநிலங்களில் கும்பாபிஷேக நிகழ்வை நேரலை செய்ய மக்கள் கோரிக்கை செய்து வருகின்றனர். இந்த நிலையில் ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்வு நேரலையில் திரையரங்குகளில் ஒளிபரப்பப்பட உள்ளதாக PVR INOX திரையரங்கு நிர்வாகம் அறிவித்துள்ளது.
Also Read - ஹீட்டர் போட்ட பெண் ஷாக் அடித்து பலி..!
ராமர் கோவில் கும்பாபிஷேகம் இந்தியாவில் உள்ள 70 க்கும் மேற்பட்ட நகரங்களில், 160 க்கம் அதிகமான திரையரங்ககளிர் ஒளிபரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஜனவரி 22 ஆம் தேதி (Ramar Kovil Opening Date) காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை ஒளிபரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கும்பாபிஷேக விழாவினை நேரலையில் திரையரங்குகளில் பார்க்க விரும்புபவர்கள் இதற்காக டிக்கெட்டுகள் PVR INOX ஆப் அல்லது இணையதளம் மற்றும் பிற தளங்களில் ரூபாய் 100 கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வரலாற்று நிகழ்வை காண ஆர்வமுள்ள பார்வைகாளர்களுக்கு ஒரு பாப்கார்ன் மற்றும் ட்ரிங்க் இலவசமாக வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்து குறித்து PVR INOX நிறுவனத்தின் இணை தலைமை நிர்வாக அதிகாரி கௌதம் தத்தா கூறியது என்னவென்றால், இது போன்ற மகத்தான மாற்றம் வரலாற்று நிகழ்வுகளை சமமான பிரமாண்டமான முறையில் பார்க்க வேண்டும். நாடு முழுவதும் உள்ள பக்தர்களை இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வுடன் இணைப்பது எங்களுக்கு பாக்கியம் உள்ளது. சினிமா அனுபவத்தை வழங்கும் எங்கள் அர்ப்பணிப்பு பொழுதுபோக்குக்கு அப்பாற்பட்டது. மேலும் இந்த வரலாற்று தருணத்தை எங்கள் பக்தர்களுடன் பகிர்ந்து கொள்ள நாங்கள் எதிர்நோக்குகிறோம் என்று கூறினார்.