1. Home
  2. தமிழ்நாடு

தமிழகத்தில் உள்ள ஒரு கோவிலில் தேசிய கொடி வைத்து பூஜை செய்யும் பழக்கம் உள்ளது தெரியுமா ?

1

இந்திய சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று தமிழகத்தில் உள்ள ஒரு கோவிலில் தேசிய கொடியை வைத்து வழிபாடு செய்வதுண்டு. 

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஒரு விசேஷம் உண்டு அதாவது ஒவ்வொரு சுதந்திர தினத்தன்றும் அதிகாலையில் நமது தேசியக்கொடியை வெள்ளித்தட்டில் வைத்து நடராஜர் முன்பாக பூஜை செய்கிறார்கள். அதன் பிறகு அந்தக் கொடியை மேளதாளத்துடன் எடுத்து வந்து கோயிலின் கிழக்கு கோபுரத்தில் ஏற்றி மரியாதை செய்கிறார்கள். இது வேறெந்த வழிபாட்டுத் தலத்திலும் இல்லாத சிறப்பாகும். கொடியை கோவிலில் வைத்து வழிப்படும் ஒரே ஸ்தலம் சிதம்பரம் நடராஜர் கோவிலில்தான்.  ஆனால் அன்றைய தினம் தேவாரம் பாடினால் தீட்டு என சொல்லப்படுகிறது.

Trending News

Latest News

You May Like