1. Home
  2. தமிழ்நாடு

#BIG BREAKING : ராஜினாமா செய்கிறார் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்..!

1

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா ஆகிய மாநில சட்டப்பேரவைகளில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று (டிச.03) காலை 08.00 மணிக்கு தொடங்கிய நிலையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தெலங்கானா மாநிலத்தில் மொத்தம் உள்ள 119 சட்டப்பேரவைத் தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்கப் பெரும்பான்மைக்கு தேவையான தொகுதிகளை விட அதிகமான தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் முதல்- மந்திரி சந்திரசேகர ராவ் தலைமையிலான அமைச்சரவை நாளை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளது.

வருகிற 9-ந்தேதி தெலுங்கானா முதல்- மந்திரி பதவி ஏற்பு நிகழ்ச்சி நடத்தப்படும் என்று மாநில காங்கிரஸ் தலைவர் ரேவேந்த் ரெட்டி அறிவித்துள்ளார்.

இவ்வளவு நம்பிக்கை ஒரு புறம் இருந்தாலும் காங்கிரஸ் கட்சியில் வெற்றி பெறும் நிலையில் உள்ள வேட்பாளர்களை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சிகளில் சந்திரசேகரராவ் ஈடுபட்டு வருவதாக கர்நாடக மாநில துணை முதல் மந்திரி சிவக்குமார் குற்றம்சாட்டி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Trending News

Latest News

You May Like