1. Home
  2. ஆரோக்கியம்

சர்க்கரை நோய் இருந்தால் சிவப்பு கொய்யாவை சாப்பிடலாமா?

1

நல்ல நார்ச்சத்துக்கள் கிடைக்க ஒரே வழி பழங்கள், காய்கறிகள்,பருப்பு வகைகள்,நட்ஸ்,முழு தானியங்கள் ஆகியவற்றை எடுத்துக் கொள்வது தான். அதுவும் ஒரே விதமான உணவாக இல்லாமல் பல்வேறு வகையான உணவு வகைகளை எடுத்துக் கொள்வதால் உங்களுக்கு அனைத்து விதமான சத்துக்கள் கிடைப்பதுடன் உங்களுக்கு தேவையான நார்ச்சத்து கிடைத்துவிடும். ஒரு கொய்யாப்பழம் சாப்பிடுவதால் உங்களுக்கு மூன்று கிராம் அளவு ஃபைபர் கிடைத்திட வாய்ப்புண்டு. ஒரு நாளைக்கு பெண்களாக இருந்தால் உங்களுக்கு 25 கிராம் ஃபைபரும், ஆண்களாக இருந்தால் 38 கிராம் ஃபைபரும் அவசியமாகும்.

கொய்யா நம் உடலுக்கு நன்மை பயக்கும், ஆனால் இப்போது கேள்வி என்னவென்றால் இளஞ்சிவப்பு மற்றும் வெள்ளை கொய்யாவில் எது நம் உடலுக்கு அதிக நன்மை பயக்கும்? 

இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை சரிசெய்ய கொய்யா உதவுகிறது என்று உணவு நிபுணர்கள் நம்புகிறார்கள். கொய்யாவில் கால்சியம் நிறைந்துள்ளது, இது எலும்புகளுக்கு நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. இதை உட்கொள்வதால் செரிமான அமைப்பு நன்றாக இருக்கும். இதனுடன், எடை இழப்புக்கு இது மிகவும் உதவுகிறது. அத்துடன் இது இதய நோய் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.

ஒரு கப் சிவப்பு கொய்யாவிலிருந்து உங்களுக்கு 20 சதவீத ஃபோலேட் கிடைத்திடும். உங்கள் உடலில் இருக்கக்கூடிய டிஎன்ஏ,ஆர்.என்.ஏ மற்றும் புதிய செல்களுக்கு ஃபோலேட் மிகவும் அவசியமாகும். உங்கள் உடலில் போதுமான அளவு ஃபோலேட் கிடைக்கவில்லை என்றால் மெகலோப்ளாஸ்டிக் அனீமியா எனப்படுகிற குறைபாடு ஏற்படக்கூடும் அதோடு உங்களது சருமம்,தலைமுடி, நகங்கள் ஆகியவை பாதிக்கப்படும்.

இளஞ்சிவப்பு கொய்யாவில் வெள்ளை கொய்யாவை விட குறைந்த அளவு சர்க்கரை மற்றும் மாவுச்சத்து உள்ளது. இளஞ்சிவப்பு நிறத்தை விட வெள்ளை கொய்யாவில் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் அதிகம் காணப்படுகின்றன, ஆனால் உணவியல் நிபுணர்களின் கூற்றுப்படி, இளஞ்சிவப்பு கொய்யா உடலுக்கு சிறந்தது என்கின்றனர். இளஞ்சிவப்பு கொய்யாவில் வைட்டமின் ஏ மற்றும் சி அதிகளவில் உள்ளது. இதனுடன், ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்களும் இதில் காணப்படுகின்றன. ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது மற்றும் பல தீவிர நோய்களுக்கு எதிராக பாதுகாக்க உதவுகிறது. இதில் உள்ள நார்ச்சத்து நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது என்பதை நிரூபிக்கிறது. மேலும் நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்துகிறது, மலச்சிக்கலை தடுக்கிறது மற்றும் வயிற்றை சுத்தப்படுத்த உதவுகிறது. எனவே வெள்ளை மற்றும் இளஞ்சிவப்பு கொய்யாவில் அதிக நன்மை இளஞ்சிவப்பு கொய்யாவில் தான் இருக்கிறது.

சர்க்கரை நோயாளிகள் : இதில் அதிகப்படியான நார்ச்சத்துக்களும் குறைந்த க்ளைசமிக் இண்டெக்ஸும் இருக்கின்றன. இதனைச் சாப்பிடுவதால் நம் ரத்தத்தில் சர்க்கரை அளவு கூடுவதை தவிர்க்க முடியும். அதனால் சர்க்கரை நோயாளிகள் இந்த பழம் சாப்பிட்டவுடன் சர்க்கரை அளவு கூடிடுமோ என்கிற அச்சம் கொள்ளத் தேவையில்லை.

இதயம் : சிவப்பு கொய்யாப்பழம் சாப்பிடுவதினால் அது நம் உடலில் சோடியம் மற்றும் பொட்டாசியத்தினை பேலன்ஸ் செய்திடும். அதோடு ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ளும், இதனால் ஹைப்பர் டென்சன் குறைந்திடும். அதோடு சிவப்பு கொய்யாப்பழம் ட்ரிக்ளிசிரைட்ஸ் மற்றும் கெட்டக் கொழுப்பினை நீக்கவும் துணை நிற்கிறது. இதனால் இதயம் தொடர்பான பிரச்சனைகள் வராமல் தவிர்க்க முடியும். கெட்டக்கொழுப்பை குறைப்பதுடன் நல்ல கொழுப்பை அதிகரிக்கச் செய்கிறது இந்த சிவப்பு கொய்யா.

இதில் கர்ப்பிணிகளுக்கு தேவையான விட்டமின் பி 9 இடம்பெற்றிருக்கிறது. இவை, குழந்தையின் நரம்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவிடும்.இதனால் குழந்தை கருவில் உருவாகும் போது ஏற்படுகிற குறைபாடுகளை நாம் தவிர்க்க முடியும். கர்ப்பிணிகள் இதனை தாரளமாக சாப்பிடலாம்.

இன்றைக்கு பெரும்பாலானோருக்கு இருக்கக்கூடிய மிக முக்கியமான பிரச்சனைகளில் ஸ்ட்ரஸ் முக்கிய பிரச்சனையாக இருக்கிறது. சிவப்பு கொய்யாப்பழம் நம் தசைகளையும் நரம்புகளையும் அமைதிப்படுத்த உதவிடும். நாள் முழுவதும் களைப்பாக வேலை செய்துவிட்டு சோர்வாக இருக்கும் போது, உங்களை புத்தாக்கம் செய்து கொள்ள சிவப்பு கொய்யா பெரிதும் உதவிடுகிறது.

மற்ற பழங்களை விட கொய்யாப்பழத்தில் விட்டமின் சி மற்றும் இரும்புச் சத்து நிறையவே இருக்கிறது. இவை நம் உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்திடும். இதனால் வைரஸ் தொற்றுகளினால் உங்களுக்கு ஏற்படக்கூடிய காய்ச்சல், இருமல், சளித்தொல்லை ஆகியவற்றிலிருந்து எளிதாக தப்பிக்க முடியும்.

கொய்யா பழத்தை எப்போது சாப்பிட வேண்டும்
சாப்பிடுவதற்கு முன் இப்பழத்தை சாப்பிடுவது நல்லதல்ல. சாப்பிட்ட பின்போ, அல்லது சாப்பிடுவதற்கு நீண்ட நேரத்திற்கு முன்போ சாப்பிட்டால் நல்லது. கொய்யா பழத்தை இரவில் சாப்பிடக்கூடாது.

Trending News

Latest News

You May Like