1. Home
  2. தமிழ்நாடு

“நாட்டில் இனி மோடி அலை அல்ல, எங்கள் அலைதான்!!”

“நாட்டில் இனி மோடி அலை அல்ல, எங்கள் அலைதான்!!”

கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ள நிலையில், நாட்டில் இனி மோடி அலை அல்ல, எங்கள் அலைதான் என சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்று, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் 135 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றி உள்ளது.

“நாட்டில் இனி மோடி அலை அல்ல, எங்கள் அலைதான்!!”


ஆளும் கட்சியாக இருந்த பாஜக 66 இடங்களை மட்டுமே பெற்று ஆட்சியை பறிகொடுத்தது. குமாரசாமியின் ஜேடிஎஸ் கட்சி 19 இடங்களில் வெற்றி பெற்றது. இந்நிலையில் சிவசேனாவின் முன்னணி தலைவர் சஞ்சய் ராவத் பாஜகவை கடுமையை விமர்சித்துள்ளார்.

அதில், கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி பெற்றதன் மூலம் பொதுமக்களால் சர்வாதிகாரம் வீழ்த்தப்படும் என்பது நிரூபணமாகியுள்ளது என தெரிவித்துள்ளார்.

“நாட்டில் இனி மோடி அலை அல்ல, எங்கள் அலைதான்!!”

காங்கிரஸ் வெற்றி மூலம் அனுமார் காங்கிரஸ் கட்சியின் பக்கம் இருக்கிறார் என்றும் பாஜகவின் பக்கம் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது. பாஜக தோல்வி அடைந்தால் மாநிலத்தில் கலவரம் வரும் என்றார். ஆனால் கர்நாடகா அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் தான் உள்ளது.

நாட்டில் மோடியின் அலை ஓய்ந்துவிட்டது. இனி எதிர்க்கட்சிகளான எங்கள் அலை மட்டுமே வீசும். 2024 தேர்தலுக்கான எங்கள் பணிகள் தொடங்கிவிட்டன. சரத் பவார் தலைமையில் 2024 தேர்தல் குறித்து ஆலோசனை நடத்துகிறோம் என்று தெரிவித்தார்.

newstm.in

Trending News

Latest News

You May Like