“இந்தி பேச முடியாது…” – வைரலாகும் ஆட்டோ ஓட்டுநரின் பதில்!! VIDEO
ஹிந்தியில் பேச வேண்டும் என்று கூறியவருக்கு ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் பதிலடி கொடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பெங்களூரில் நடைபெற்ற சம்பவம் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. ஹிந்தி பேசும் சில இளம்பெண்கள் பெங்களூருவுக்கு வந்துள்ளனர். அப்போது அவர்கள் ஆட்டோ ஒன்றில் ஏறியுள்ளனர்.
ஆட்டோ ஓட்டுநர் மாநில மொழியான கன்னடத்தில் பேசியுள்ளார். ஆனால் அப்பெண்கள் ஹிந்தியில் பேசுமாறு கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த ஆட்டோ ஓட்டுநர், நான் ஏன் ஹிந்தியில் பேசவேண்டும் என்று கேள்வி எழுப்பினார்.
இது கர்நாடகா, நீங்கள் கன்னடத்தில் பேசுங்கள், இது எங்கள் நிலம், நாங்கள் ஏன் ஹிந்தியில் பேசவேண்டும் என்று அவர் ஆத்திரம் அடைந்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பலரும் ஆட்டோ ஓட்டுனருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர். கர்நாடகாவில் கன்னடமே மக்களின் மொழியாக இருக்கும் நிலையில், அங்கு வரும் வட இந்தியர்கள் அதனை புரிந்து நடந்துகொள்ளவேண்டும்.
அதை விட்டுவிட்டு ஹிந்தியில் பேச வேண்டும் என்று கூற வடமாநிலத்தவருக்கு உரிமை இல்லை என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். பாஜக ஒரே நாடு ஒரே மொழி என்று கூறிவருகிறது.
ஆனால் தென் மாநிலங்கள் அதை ஏற்பதாக இல்லை. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தற்போது பெங்களூரு ஆட்டோ ஓட்டுநர் பேசியுள்ளார். அதனால் இந்த வீடியோவை தென்னிந்திய மக்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
newstm.in