‘லிவ் இன்’ உறவில் இருந்த விமான பணிப்பெண் திடீர் உயிரிழப்பு!!
'லிவ் இன்' உறவில் இருந்த விமான பணிப்பெண் 4ஆவது மாடியில் இருந்து கிழே விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இமாச்சலப்பிரதேசத்தை சேர்ந்த அர்ச்சனா திமென் (28) என்ற இளம்பெண் விமான நிறுவனத்தில் பணிப்பெண்ணாக வேலை செய்து வந்தார். இவருக்கு ஆன்லைன் டேட்டிங் ஆப் மூலம் கேரளாவை சேர்ந்த ஆதேஷ் என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டது.
சாஃப்ட்வேர் இன்ஜினியரான ஆதேஷ் பெங்களூருவில் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அர்ச்சனாவுக்கும் ஆதேஷுக்கும் இடையேயான பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.
பின்னர், அர்ச்சனாவும், ஆதேஷூம் கடந்த சில மாதங்களாக லிவ் இன் முறையில் வாழ்ந்து வந்துள்ளனர். அதைத் தொடர்ந்து இவருக்கும் இடையே அவ்வப்போது சிறுசிறு வாக்குவாதங்களும், பிரச்னைகளும் நிலவி வந்துள்ளது.
இந்நிலையில், அர்ச்சனா கடந்த சில நாட்களுக்கு முன் துபாயில் இருந்து பெங்களூரு வந்துள்ளார். பின்னர் இருவரும் கடந்த வெள்ளிக்கிழமை இரவு தியேட்டருக்கு சென்றுள்ளனர். படம் முடிந்து வீட்டுக்கு வந்த பிறகு இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அதைத் தொடர்ந்து இரவு 12 மணியளவில் அர்ச்சனா அடுக்குமாடி குடியிருப்பின் 4வது மாடியில் இருந்து கீழே விழுந்துள்ளார். அவரை மீட்ட ஆதேஷ் மற்றும் அக்கம்பக்கத்தினர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அர்ச்சனா ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார், அர்ச்சனாவின் லிவ் இன் காதலன் ஆதேஷை கைது செய்தனர்.
அர்ச்சனா 4வது மாடியில் இருந்து கீழே குதித்தாரா, அல்லது அர்ச்சனாவை ஆதேஷ் கீழே தள்ளி கொலை செய்தாரா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
newstm.in