ஹோட்டல் அறையில் இறந்துகிடந்த திரைப்பட இயக்குநர்!!
பிரபல திரைப்பட இயக்குநர் ஹோட்டல் அறையில் மர்மமான முறையில் இறந்துகிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போஜ்புரி திரையுலகின் பிரபல இயக்குநர்களில் ஒருவரான. சுபாஷ் சந்திர திவாரி, படங்கள், குறும்படங்கள் இயக்கியுள்ளார். இவர் இயக்கி வரும் படத்திற்காக உத்தரப்பிரதேசம் சென்றார்.
அங்கு சோனபத்ரா என்ற இடத்தில் ஹோட்டல் ஒன்றில் படக்குழுவுடன் தங்கி இருந்தார். இந்நிலையில், நேற்று அறைக்கு சென்ற அவர், பின்னர் அறையில் இருந்து வெளியே வரவில்லை.
பதற்றமடைந்த படக்குழுவினர் ஹோட்டல் ஊழியர்களுக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்து கதவை திறந்து பார்க்கையில் இயக்குநர் சுபாஷ் மயக்க நிலையில் கிடந்தார்.
அவரை சோதனை செய்ததில், மூச்சு இல்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் போலீஸார் உடலை மீட்டு உடற்கூராய்வுக்கு அனுப்பினர். தொடர்ந்து இதுகுறித்து விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர்.
இயக்குநர் சுபாஷ் சந்திர திவாரியின் உடலில் எந்த ஒரு காயங்களும் இல்லை என்பதால் இது ஒரு விபத்தாக இருக்கலாம் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in