1. Home
  2. தமிழ்நாடு

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த தமிழக வீரருக்கு ராணுவ மரியாதை!!

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த தமிழக வீரருக்கு ராணுவ மரியாதை!!

அருணாச்சலப் பிரதேசத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த தமிழ்நாட்டை சேர்ந்த ராணுவ வீரர் மேஜர் ஜெயந்தின் உடல் ராணுவத்தினரின் இறுதி மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

இந்திய ராணுவத்துக்கு சொந்தமான சீட்டா வகை ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் லெப்டினன்ட் வி.வி.பி.ரெட்டி, உதவி விமானி மேஜர் ஜெயந்த் ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.

விபத்தில் உயிரிழந்த விமானி ஜெயந்த் தேனி மாவட்டம் ஜெயமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர். அவரது மறைவால் கிராமமே சோகத்தில் மூழ்கியது. இந்நிலையில் மேஜர் ஜெயந்த்தின் உடல் விமானப்படை விமானம் மூலம் மதுரைக்கு கொண்டு வரப்பட்டது.


ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த தமிழக வீரருக்கு ராணுவ மரியாதை!!

மதுரை விமான நிலையத்தில் ஆட்சியர் அனிஷ் சேகர், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் மேஜர் ஜெயந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அதைத் தொடர்ந்து உடல் ஜெயமங்கலத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

அவரது இல்லத்தில் வைக்கப்பட்ட உடலுக்கு உறவினர்கள், நண்பர்கள், பொதுமக்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது உடலின் மீது போர்த்தப்பட்டிருந்த தேசிய கொடியை, ராணுவத்தினர் முறைப்படி அகற்றி, குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.

இதையடுத்து 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க, முழு ராணுவ மரியாதையுடன் மேஜர் ஜெயந்தின் உடலுக்கு இறுதிச் சடங்கு நடத்தப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

newstm.in

Trending News

Latest News

You May Like