ஹரித்வாரில் ரிக்ஷா ஓட்டிய தளபதி விஜயின் தந்தை!!
இயக்குநரும், விஜயின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் தனது உதவியாளர்களை ரிக்ஷாவில் அமர வைத்து ஓட்டிச் சென்ற புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
எஸ்.ஏ.சந்திரசேகர் கடந்த சில ஆண்டுகளாக திரைப்படங்கள் இயக்கவில்லை என்றாலும், பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களாக உள்ள ஷங்கர், எம்.ராஜேஷ், பொன்ராம் போன்ற பலர் இவரிடம் உதவி இயக்குனர்களாக பணியாற்றி உள்ளனர்.
இயக்குநர் எஸ். ஏ. சந்திரசேகர் எப்போதும் மனதளவில் இளமையாக இருப்பவர்.வயது எண்பதைத் தொட்ட போதும் உடல் ரீதியாகவும் எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கி வருபவர். தனது உதவி இயக்குநர்கள் மீது உரிமையும் அன்பும் வைத்து இருப்பவர்.
இப்போது அவர் ஒரு பக்திச்சுற்றுலாவாக ஹரித்வார் சென்றுள்ளார். அங்கே தனது உதவியாளர்களை சைக்கிள் ரிக்ஷாவில் அமர வைத்து ஓர் இடத்துக்கு ஓட்டிச் சென்று இருக்கிறார். இந்தப் பயணத்தை நினைத்து அவரது உதவியாளர்கள் நெகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
newstm.in