1. Home
  2. தமிழ்நாடு

ஷாருக்கான் மகனை கைது செய்த அதிகாரி மீது வழக்கு!!

ஷாருக்கான் மகனை கைது செய்த அதிகாரி மீது வழக்கு!!

போதைப் பொருள் விவகாரம் தொடர்பாக ஷாருக்கான் மகன் ஆர்யன் கானை கைது செய்த அதிகாரி மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.

பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் கடந்த 2021ஆம் ஆண்டு சொகுசுக் கப்பலில் போதைப் பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டார். மும்பை போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி சமீர் வான்கடே கைது நடவடிக்கையில் ஈடுபட்டார்.

தொடர்ந்து, ஆர்யன் கான் போதைப்பொருள் பயன்படுத்தியதாக ஆதாரம் இல்லை என்று விசாரணைக் குழு அறிக்கை அளித்ததையடுத்து வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.

வழக்கில் இருந்து ஆர்யன் கானை விடுவிக்க அவர் லஞ்சம் கேட்டதாக புகார் எழுந்ததையடுத்து, மும்பையில் உள்ள பகுப்பாய்வு மற்றும் இடர் மேலாண்மை இயக்குநரகத்துக்கு அவர் மாற்றப்பட்டார்.

ஷாருக்கான் மகனை கைது செய்த அதிகாரி மீது வழக்கு!!

தற்போது சமீர் வான்கடே மீது சிபிஐ ஊழல் வழக்குப்பதிவு செய்துள்ளது. ஆர்யன் கானை விடுவிக்க லஞ்சம் கேட்ட விவகாரத்தில், சமீர் வான்கடே மற்றும் நான்கு பேர் தொடர்புடைய 29 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியது.

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து சுமார் ரூ.25 கோடி பறிக்க திட்டமிட்டதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஷாருக்கான் மகனை கைது செய்த அதிகாரி மீது வழக்கு!!

போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (என்சிபி) கொடுத்த தகவலின் அடிப்படையில் மும்பை, டெல்லி, ராஞ்சி, லக்னோ, சென்னை மற்றும் கவுகாத்தி ஆகிய இடங்களில் சோதனை நடத்தப்பட்டு என்சிபி அதிகாரிகளான சமீர் வான்கடே உள்ளிட்ட அதிகாரிகள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like