1. Home
  2. தமிழ்நாடு

ஷாக் நியூஸ்… உயர்கிறது குடிநீர் கட்டணம்!!

ஷாக் நியூஸ்… உயர்கிறது குடிநீர் கட்டணம்!!

கூடுதல் செலவினங்களை கருத்தில் கொண்டு சென்னை மாநகராட்சி பகுதிகளிலுள்ள வீடுகளில் குடிநீர் மற்றும் கழிவுநீர் கட்டணம் உயர்த்தப்படுகிறது.

சென்னை மாநகராட்சியில் 15 மண்டலங்களுக்கும் நாள்தோறும் 100 கோடி லிட்டர் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. கடந்த 2019 -20ஆம் ஆண்டு வீடுகளுக்கு 5%, வணிகம் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு 10% குடிநீர் கட்டணம் உயர்த்தப்பட்டது.

ஆண்டுதோறும் இதே சதவிகிதத்திற்கு கட்டணம் உயர்த்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால், கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக குடிநீர் கட்டணம் உயத்தப்படவில்லை.


ஷாக் நியூஸ்… உயர்கிறது குடிநீர் கட்டணம்!!

இதனால் பெருநகர சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றல் வாரியத்திற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே 2023 - 24ஆம் நிதியாண்டில் குடிநீர் கட்டணத்தை உயர்த்த குடிநீர் வாரியம் முடிவு செய்துள்ளது.

சென்னை மாநகராட்சி பகுதிகளிலுள்ள வீடுகளுக்கு குடிநீர் மற்றும் கழிவுநீர் கட்டணமாக மாதந்தோறும் ரூ.80 வசூலிக்கப்பட்டு வருகிறது. கட்டண உயர்வு அமலுக்குப் பிறகு இது ரூ.84 ஆக வசூலிக்கப்படும்.

தொழில் நிறுவனங்களுக்கு 250 ரூபாயாக இருந்த கட்டணம் 263 ரூபாயாக உயர்கிறது. இந்த கட்டண உயர்வானது ஏப்ரல் மாதம் முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. கூடுதல் செலவினங்களை கருத்தில் கொண்டு கட்டணம் உயர்த்தப்படுவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like