வேளாண் பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பு..!! விவசாயிகளை வெளிநாடுகளுக்கு அழைத்து சென்று பயிற்சி அளிக்க திட்டம்..!!
2023-24ம் நிதியாண்டிற்கான தமிழக நிதிநிலை அறிக்கை தமிழக சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பல்வேறு துறை சார்ந்த அறிவிப்புகளையும், அதற்கான நிதி ஒதுக்கீட்டையும் அறிவித்தார். இநிலையில், 2023-2024-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. திமுக அரசு பொறுப்பேற்றது முதல், வேளாண் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.
வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.
நாமக்கல், திருப்பூர், கோவை, ஈரோடு, புதுக்கோட்டை ஆகிய 5 மாவட்டங்களில் புதிதாக சிறுதானிய மண்டலங்கள் உருவாக்கப்படும். சிறுதானிய திருவிழாக்கள் நடத்தப்படும். ரூ.82 கோடி மதிப்பில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.கம்பு, கேழ்வரகு உள்ளிட்ட சிறு தானியங்களை சாகுபடி செய்து மாநில அளவில் அதிக விளைச்சல் பெறும் விவசயிகளுக்கு தலா ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும். தமிழ்நாடு அரசால் ₹1695 கோடி காப்பீடு கட்டணம் மானியமாக வழங்கப்பட்டு, 6.77 லட்சம் விவசாயிகளுக்கு ₹783 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளில், 1.5 லட்சம் விவசாய மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
கடலூர், கன்னியாகுமரி உள்ளிட்ட 21 மாவட்டங்களில் பலா சாகுபடியை உயர்த்த ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு
மதுரை மல்லி உற்பத்தியை அதிகரிக்க ரூ.7 கோடியில் புதிய இயக்கம் செயல்படுத்தப்படும்.
சேலம் , அமராவதி சர்க்கரை ஆலைகளில் மதிப்புக்கூட்டப்பட்ட உரம் தயாரிக்க ரூ.3 கோடி ஒதுக்கீடு
கரும்பு விவசாயிகளுக்கு கொள்முதல் விலையுடன் கூடுதல் ஊக்கத்தொகை வழங்க ரூ.285 கோடி ஒதுக்கீடு.கரும்பு சாகுபடி மேம்பாட்டுத் திட்டத்திற்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கரும்பு விவசாயிகளுக்கு டன்னுக்கு ரூ.195 கூடுதலாக வழங்கப்படும் என வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
நூற்பாலைகளுக்கு தேவையான பஞ்சை தமிழ்நாட்டிலேயே உற்பத்தி செய்ய ரூ.12 கோடியில் பருத்தி இயக்கம் செயல்படுத்தப்படும்
ரூ.33 கோடி நிதி ஒதுக்கீட்டில் சூரிய காந்தி, நிலக்கடலை உள்ளிட்ட எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
உழவர் நலன் சார்ந்த தகவல்களை கணினி மயமாக்கி GRAINS என்ற இணையதளம் அறிமுகம் செய்யபடும்
தேசிய அளவில் தென்னை உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடம் பெற ரூ.20 கோடி ஒதுக்கீடு.
ஊருக்கு 300 குடும்பங்கள் வீதம் 15 லட்சம் தென்னகன்றுகள் இலவசமாக வழங்கப்படும்.
விவசாயிகளை வெளிநாடுகளுக்கு அழைத்து சென்று பயிற்சி அளிக்க திட்டம்.