வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சல்!!
உத்தரப்பிரதேசத்தில் பிரயாக்ராஜ், கான்பூர் உள்பட பல நகரங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து உள்ளது.
சில நாட்களுக்கு முன், பிரயாக்ராஜ் நகரில், ஒரு பள்ளியில் மாணவர்கள் பலர் டெங்கு பாதிப்புக்கு ஆளான நிலையில், ஒரு நாள் பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, நகரின் பல பகுதிகளில் பரவல் அதிகரித்து வருகிறது.
பிரயாக்ராஜ் நகரில் டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு 36 பேர் உயிரிழந்து இருக்கக்கூடும் என அச்சம் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால், இதுபற்றிய அதிகாரப்பூர்வ தகவல் எதனையும் அம்மாநில அரசு வெளியிடவில்லை.
கான்பூரில் டெங்கு வார்டில் சிகிச்சைக்கு சேர்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தினசரி 60 முதல் 70 பேர் காய்ச்சல் பாதிப்புக்காக சேருகின்றனர். அவர்களில் டெங்கு பாதிப்பு உறுதியானவர்கள் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதுவரை 6 பெரியவர்கள் மற்றும் 7 குழந்தைகள் என 13 பேர் அரசு மருத்துவமனையில் சேர்ந்து உள்ளனர் என கூறியுள்ளார். அரசு அனைத்து மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவ பணியாளர்களின் விடுமுறைகளை ரத்து செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.
newstm.in