1. Home
  2. தமிழ்நாடு

வெங்காயம், தானியங்கள் விலை: மத்திய அரசு சொன்ன மகிழ்ச்சி செய்தி..!

வெங்காயம், தானியங்கள் விலை: மத்திய அரசு சொன்ன மகிழ்ச்சி செய்தி..!

பருப்பு, வெங்காயம் உள்ளிட்ட தானியங்களின் விலை உயர இப்போதைக்கு வாய்ப்பு இல்லை என, மத்திய அரசின் நுகர்வோர் விவகாரப் பிரிவு செயலர் ரோகித் சிங் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மத்திய அரசின் நுகர்வோர் விவகாரப் பிரிவு செயலர் ரோகித் குமார் சிங் கூறியதாவது; "இந்தியாவில் இப்போது பருப்பு உள்ளிட்ட தானியங்களின் கையிருப்பு போதுமான அளவு உள்ளது. இதன்காரணமாக இப்போதைக்கு தானியங்களின் விலை உயர வாய்ப்பு இல்லை.

வெங்காயம், தானியங்கள் விலை: மத்திய அரசு சொன்ன மகிழ்ச்சி செய்தி..!

மத்திய அரசிடம் 2 லட்சத்து 50 ஆயிரம் டன் வெங்காயம் இருப்பு உள்ளது. தற்போது சில மாநிலங்களில் வெங்காயம் விலை உயர்ந்ததாக வந்த தகவலை அடுத்து அந்த மாநிலங்களுக்கு வெங்காயம் உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டது. இந்தியாவில் ஆண்டுக்கு 2 கோடியே 72 லட்சம் டன் அளவுக்கு பருப்பு வகைகள் பயன்படுத்தப்படுகிறது.

இதில் 2 கோடியே 50 லட்சம் டன் பருப்பு வகைள் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படுகிறது. மீதியை தான் நாம் இறக்குமதி செய்கிறோம். இந்த ஆண்டு நம்மிடம் 43 லட்சம் டன் பருப்பு இருப்பில் உள்ளது. எனவே இப்போதைக்கு தட்டுப்பாடு ஏற்பட எந்த வாய்ப்பும் இல்லை. அப்படியே தேவை அதிகமாக ஏற்பட்டால் அதனை உடனடியாக கொள்முதல் செய்யவும் தயாராக உள்ளோம்" என்று தெரிவித்தார்.

Trending News

Latest News

You May Like