1. Home
  2. தமிழ்நாடு

வீரப்பன் கூட்டாளி மீசை மாதையன் காலமானார்!!

வீரப்பன் கூட்டாளி மீசை மாதையன் காலமானார்!!

வீரப்பன் கூட்டாளிகளில் முக்கியமானவரான மீசை மாதையன் காலமானார்.

இவர் 1993ஆம் ஆண்டு வீரப்பன் குழுவிலிருந்து தப்பி வந்து கர்நாடக போலீசில் சரணடைந்தார். விசாரணை முடிவில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் உச்ச நீதிமன்றம், மீசை மாதையன், பிலவேந்திரன், சைமன், ஞானப்பிரகாசம் ஆகிய நான்கு பேரின் ஆயுள் தண்டனையைத் தூக்குத் தண்டனையாக மாற்றியது.

அதை எதிர்த்து குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பினர். மனுவை அப்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தள்ளுபடி செய்தார். சமூக ஆர்வலர்களின் போராட்டத்தை அடுத்து உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.


வீரப்பன் கூட்டாளி மீசை மாதையன் காலமானார்!!

அவர்கள் தண்டனையை உச்சநீதிமன்றம் குறைத்து, ஆயுள் தண்டனையாக மாற்றியது. 2018 மே மாதம் சைமன் என்பவரும், 2022இல் பிலவேந்திரன் என்பவரும் சிறையிலேயே உயிரிழந்தனர். கடந்த பிப்ரவரியில் ஞானபிரகாசம் பரோலில் வெளியே வந்தார்.

31 ஆண்டுகளாக மைசூர் சிறையிலிருந்த, மீசை மாதையன் கடந்த 11ஆம் தேதி அதிகாலை உடல்நலம் பாதிக்கப்பட்டு, நினைவிழந்த நிலைக்குச் சென்றார். முதல் கட்டமாக மைசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த மீசை மாதையன் நினைவு திரும்பாமலே இன்று மாலை உயிரிழந்தார்.

newstm.in

Trending News

Latest News

You May Like