விஷம் குடித்து கல்லூரி மாணவன் தற்கொலை!!
ஆன்லைனில் விஷம் வாங்கி குடித்து தனியார் கல்லூரி மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த நிகில் (21) என்ற மாணவன் விடுதியில் தங்கி படித்து வந்தார். இந்நிலையில் மாணவன் நிகில் திடீரென கல்லூரி விடுதியில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தர். மேலும், மாணவன் தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை செய்வதற்காக மாணவன் நிகில் ஆன்லைனில் விஷம் வாங்கியது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
newstm.in