விஷச்சாராயம் குடித்தவர்களில் மேலும் ஒருவர் பலி!!
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே விஷச்சாராயம் குடித்து சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் ஒருவர் உயிரிழந்தார்.
கடந்த வாரம் மரக்காணம் அருகே எக்கியார் குப்பத்தை சேர்ந்தவர்கள் விஷச்சாராயம் குடித்தத்தில் அடுத்தடுத்து உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விவகாரம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
விஷச்சாராயம் குடித்தவர்களில் 13 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும் சிலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் உயிரிழந்தார்.
எக்கியார் குப்பத்தை சேர்ந்த கன்னியப்பன் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விழுப்புரம் மாவட்டத்தில் விஷ சாராயம் குடித்து இதுவரை 14 பேரும், செங்கல்பட்டில் 8 பேரும் என 22 பேர் உயிரிழந்துள்ளனர்.
newstm.in