விஷச்சாராய விற்பனை – பாஜக நிர்வாகி கைது!!
செங்கல்பட்டு விஷச்சாராய விற்பனை விவகாரத்தில் தலைமறைவாக இருந்த பா.ஜ.க நிர்வாகியை காவல்துறையினர் கைது செய்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் அருகே பெருங்கரணை கிராமத்தை சேர்ந்த 5 பேர் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தனர். கள்ளச்சாராயம் மற்றும் போதைப்பொருட்களை முற்றிலும் ஒழிக்க தமிழ்நாடு அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில், இச்சம்பவம் நடைபெற்ற பகுதியைச் சேர்ந்த மரக்காணம் காவல் நிலைய ஆய்வாளர் அருள் வடிவழகன், உதவி ஆய்வாளர் தீபன், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஆய்வாளர் மரியா சோபி மஞ்சுளா மற்றும் உதவி ஆய்வாளர் வகுருநாதன் ஆகியோர் ஏற்கனவே தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதனிடையே செங்கல்பட்டு விஷச்சாராயத்தால் உயிரிழந்தவரின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்தது. 6 பிரிவுகளின் கீழ் 2 வழக்குகள் பதிவு செய்த போலீஸார் முக்கிய குற்றவாளியான அமாவாசை என்பவரை கைது செய்தனர்.
மேலும் கூட்டாளிகளான சந்துரு, வேலு, ராஜேஷ் மற்றும் நரேஷ் ஆகிய 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் பாஜகவின் ஓ.பி.சி அணி செங்கல்பட்டு தெற்கு மாவட்ட தலைவர் விஜயகுமார் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் விஜயகுமாரை கட்சியை விட்டு நீக்கபட்டுள்ளதாக தமிழக பா.ஜ.க தெரிவித்துள்ளது.
newstm.in
.png)