விரைவில் முடிவுக்கு வருகிறதா அதிமுக பொதுக்குழு விவகாரம்!?
அதிமுக பொதுக்குழு வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் சாய் அமா்வு முன் விசாரணை நடைபெற்று வருகிறது.
வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் பதவிக்கு தேர்தல் நடைப்பெற்றதா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு பெரும்பான்மை பொதுக்குழு உறுப்பினர்களால் இடைக்கால பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்பட்டார் என ஈபிஎஸ் தரப்பில் பதில் அளிக்கப்பட்டது.
அடிப்படை உறுப்பினர்கள் தான் பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க முடியும் என்று ஒபிஎஸ் தரப்பில் வாதம் செய்யப்பட்டது. மேலும் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றதா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்.
ஈபிஎஸ், ஓபிஎஸ் தவிர வேரு யாரும் மனுத்தாக்கல் செய்யவில்லை என்பதால் இருவரும் நேரடியாக ஒருமித்த கருத்துடன் தேர்வு செய்யப்பட்டனர் என ஓபிஎஸ் தரப்பில் பதில் அளிக்கப்பட்டது.
ஓ.பன்னீர்செல்வம் திமுகவிற்கு ஆதரவாக செயல்படுகிறார் என நீதிபதிகள் முன் ஈபிஎஸ் தரப்பினர் குற்றச்சாட்டு வைத்தனர். அதனை நீதிமன்றம் கருத்தில் கொள்ளத் தேவை இல்லை என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
மேலும் இந்த வழக்கின் விசாரணையை இந்த வாரமே முடிக்க வேண்டும் என நீதிபதிகள் திட்டவட்டமாக கூறி இந்த வழக்கின் விசாரணை நாளை தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.
newstm.in