1. Home
  2. தமிழ்நாடு

விமானத்தில் சுற்றித்திரிந்த பாம்பு… பயணிகள் பீதி!!

விமானத்தில் சுற்றித்திரிந்த பாம்பு… பயணிகள் பீதி!!

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் பி-737 விமானம் கேரள மாநிலம் கோழிகோட்டில் இருந்து துபாய்க்கு சென்றது.

இந்த விமானத்தின் சரக்குகள் வைக்கப்பட்டிருந்த இடத்தில் பெரிய பாம்பு ஒன்று சுற்றித்திரிந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பயணிகளுக்கு எதுவும் நேரவில்லை என்றும், அவர்கள் துபாயில் பாதுகாப்பாக இறக்கிவிடப்பட்டனர் என்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.


விமானத்தில் சுற்றித்திரிந்த பாம்பு… பயணிகள் பீதி!!

அதேநேரம் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் ஏற்பட்ட பாம்பு சம்பவம் குறித்து டிஜிசிஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக விமானப் போக்குவரத்து அமைப்பு தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னர் ஏர் இந்தியா விமானத்தில் பச்சையான இறைச்சி பறிமாறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

newstm.in

Trending News

Latest News

You May Like