1. Home
  2. தமிழ்நாடு

விமானத்தில் அத்துமீறிய பிரபல நடிகர்!!

விமானத்தில் அத்துமீறிய பிரபல நடிகர்!!

விமானத்தில் அத்துமீறியதால் பிரபல மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ இறக்கிவிடப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீஸ்ட் படத்தில் நடித்திருந்த இவர் மலையாளத்தில் அதிகமான படங்களில் நடித்து வருகிறார். அங்கு மிக முக்கிய நடிகராகவும் உள்ளார். பீஸ்ட் தோல்வியை தொடர்ந்து அளித்த பேட்டி ஒன்றில், தன்னை படத்தில் டம்மியாக காட்டியதாக குற்றம்சாட்டினார்.

இவருக்கு விஜய் ரசிகர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து தனது கருத்துக்கு அவர் வருத்தமும் தெரிவித்தார். இந்த நிலையில் 'பாரத சர்க்கஸ்' என்ற திரைப்படத்தின் ப்ரோமோஷனுக்காக துபாய் சென்று விட்டு கடந்த 10ஆம் தேதி படக்குழு கொச்சி திரும்பியது.


விமானத்தில் அத்துமீறிய பிரபல நடிகர்!!

அப்போது விமானத்தில் இருந்த சாக்கோ, விமானிகள் அறை என அழைக்கப்படும் காக்பிட் பகுதிக்குள் நுழைய முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. அவரை தடுத்தும் மீண்டும் நுழைய முயன்றுள்ளார்.

விமான ஊழியர்கள் அவரை இறக்கி விட்டு, மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது அவர் போதையில் இருந்தது தெரியவந்தது.

ஷைன் விமானி அறைக்குள் வலுக்கட்டாயமாக நுழைய முயற்சிக்கவில்லை என்றும் அந்த அறையின் கதவை வெளியேறுவதற்கான கதவு என்று தவறாகப் புரிந்துகொண்டார் எனவும் படத்தில் இயக்குநர் விளக்கம் அளித்துள்ளார். பின்னர் அவர் அடுத்த விமானத்தில் கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

newstm.in

Trending News

Latest News

You May Like