1. Home
  2. தமிழ்நாடு

விபத்தில் சிக்கிய நடிகர் விஜய் விஷ்வா!!

விபத்தில் சிக்கிய நடிகர் விஜய் விஷ்வா!!

நடிகர் விஜய் விஷ்வா படப்பிடிப்பின் போது டூப் போடாமல் சண்டைக் காட்சியில் நடித்ததால் விபத்தில் சிக்கினார்.

நடிகர் விஜய் விஷ்வா நடிக்கும் திரைப்படத்தின் காட்சிகள் சேலம் மாவட்டம் ஏற்காடு பகுதியில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இருசக்கர வாகனத்தின் மீது ஏறி குதிப்பது போன்ற காட்சிகள் படமாக்கபட்டது.

அப்போது பைக்கில் இருந்து குதிக்கும் போது கீழே விழுந்ததில் நடிகர் விஜய் விஷ்வாவின் வலது கை முறிந்தது. வலியால் துடித்த அவர் சேலம் ஐந்து ரோடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


விபத்தில் சிக்கிய நடிகர் விஜய் விஷ்வா!!

டூரிங் டாக்கீஸ், சாகசம், கொம்பு வச்ச சிங்கம்டா உள்ளிட்ட சில படங்களில் இவர் ஹீரோவாகவும் குணச்சித்திர வேடங்களில் நடித்துவருகிறார். அபி சரவணன் என்று அழைக்கப்பட்ட இவர் தற்போது தனது பெயரை விஜய் விஷ்வா என மாற்றிக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

Trending News

Latest News

You May Like