1. Home
  2. தமிழ்நாடு

விஜய் டிவி சீரியல் நேரம் மாற்றம்..!!

விஜய் டிவி சீரியல் நேரம் மாற்றம்..!!

விஜய் டிவி சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. பழைய சீரியல்கள் ஒருபுறம் பட்டையை கிளப்பி வரும் நிலையில், அவ்வப்போது புதிய சீரியல்களும் களமிறங்கிய ரசிகர்களை மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்து வருகின்றனர்.

அந்த வகையில் அடுத்து பொன்னி, மற்றும் ஆஹா கல்யாணம் உள்ளிட்ட இரண்டு தொடர்கள் புதிதாக டெலிகாஸ்ட் ஆக உள்ளது. இந்த சீரியல்களில் ப்ரமோக்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த புதிய தொடர்கள் வர உள்ளதால் வரும் மார்ச் 20-ந் தேதி முதல் தமிழும் சரஸ்வதியும் மற்றும் ராஜா ராணி 2 ஆகிய தொடர்கள் நேரம் மாற்றப்பட்டுள்ளது.

அதன்படி வரும் மார்ச் 20 முதல், மாலை 6 மணிக்கு தமிழும் சரஸ்வதியும், 6.30 மணிக்கு ராஜா ராணி 2, 7 மணிக்கு ஆஹா கல்யாணம் ஆகிய தொடர்கள் ஒளிபரப்பாக உள்ளது.

Trending News

Latest News

You May Like