1. Home
  2. தமிழ்நாடு

வாரிசு வேலைக்கு தகராறு… இரட்டை கொலை!!

வாரிசு வேலைக்கு தகராறு… இரட்டை கொலை!!

வாரிசு வேலை வாங்குவதில் ஏற்பட்ட தகராறில் இருவர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகாசியில் ஸ்டேட் பேங்க் காலனியை சேர்ந்த முருகேஸ்வரி என்பவரின் மகன் ரவி சிவகாசி மாநகராட்சியில் பணிபுரிந்து ஏழு மாதங்களுக்கு முன்பு உயிரிழந்தார்.

இந்நிலையில்அவரது வேலையை தனக்கு வழங்க வேண்டும் என்று ரவியின் மனைவி ரதிலட்சுமி கேட்டுள்ளார். ஆனால் தனது பேரன் ராகுலுக்கு தான் வேலையை வழங்குவேன் என்று முருகேஸ்வரி கூறியுள்ளார்.


வாரிசு வேலைக்கு தகராறு… இரட்டை கொலை!!


இதனால் தொடர்ந்து மருமகள் மாமியாரிடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் முருகேஸ்வரி வீட்டிற்கு வந்த ரதிலட்சுமியின் அண்ணன் காளிராஜன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது முருகேஸ்வரி உறவினர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தார். இந்நிலையில் காளிராஜன் மறைத்து வைத்திருந்த கத்தியால் முருகேஸ்வரி, அவரது உறவினரை கொலை செய்துவிட்டு காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.


வாரிசு வேலைக்கு தகராறு… இரட்டை கொலை!!


தகவல் அறிந்து வந்த திருத்தங்கல் போலீசார் இருவரின் உடலையும் மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கொலைக்கான காரணம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like