வாட்ஸ்அப்பில் மெசேஜை எடிட் செய்யும் அம்சம் அறிமுகம்..!!
வாட்ஸ்அப் தளம் டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ, வீடியோ, ஆடியோ மற்றும் அழைப்புகளை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டு வருகிறது. பள்ளிக்கூடம் முதல் அலுவலகம் வரை குழுக்களாக ஒருவருக்கு ஒருவர், பல தகவல்களை பரிமாறிக் கொண்டு வருகின்றனர். இந்நிலையில் வாட்ஸ்அப் பயனர்களுக்கு தனித்துவமான அம்சத்தை வழங்கும் விதமாக மெசேஜ்களை எடிட் செய்யும் வசதியை அறிமுகமாக்கி உள்ளது. அதில் பயனர்கள் மெசேஜ் அனுப்பப்பட்ட 15 நிமிடங்களுக்குள் அதை எடிட் செய்யலாம் என வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது.
வாட்ஸ்அப் செயலியில் பிழையுடன் அனுப்பப்பட்ட மெசேஜின் சாட்-டை ஓபன் செய்ய வேண்டும். அதில் பயனர்கள் திருத்த விரும்பும் மெசேஜை சில நொடிகள் அழுத்தி (லாங் பிரஸ்) பிடிக்க வேண்டும். தொடர்ந்து எடிட் மெசேஜ் ஆப்ஷன் வரும். அதை கிளிக் செய்து பயனர்கள் மெசேஜை எடிட் செய்யலாம். இந்த அம்சம் அனைவருக்கும் பயன்பாட்டுக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரைவில் உலகம் முழுவதிலும் இருக்கும் பயனாளர்கள் இந்த வசதியை பயன்படுத்தலாம் என்று மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. அனுப்பப்பட்ட செய்தி, எடிட் செய்யப்பட்டுள்ளது என்ற தகவலும் எதிர் பயனாளருக்கு தெரியும் என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.