1. Home
  2. தமிழ்நாடு

வாகன ஓட்டிகளுக்கு ஷாக்..!! இரு மடங்காகும் பேன்சி எண் கட்டணம்!

வாகன ஓட்டிகளுக்கு ஷாக்..!! இரு மடங்காகும் பேன்சி எண் கட்டணம்!

திரையுலக பிரபலங்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட விஐபிக்கள், நியூமராலஜி மற்றும் வேறு சில காரணங்களுக்காக தங்கள் வாகனங்களுக்கு ஃபேன்சி நம்பர் வாங்குகின்றனர்.இதற்காக, 2 ஆயிரம் முதல் 2 லட்சம் ரூபாய் வரை செலுத்துகின்றனர்.

தமிழக அரசு 0001 முதல் 9999 வரையிலான 100 வாகன எண்களை சிறப்பு எண்களாக ஒதுக்கியுள்ளது. இந்த எண்களை ஆர்.டி.ஓ-க்கள் மூலம் பெற முடியாது. ஆனால் சிறப்புக் கட்டணமாக செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.

இந்நிலையில், டி.என் மோட்டார் வாகன விதிகள் 1989-ன் வரைவு திருத்தத்தின்படி, ஃபேன்சி நம்பர் கட்டணத்தை 2 ஆயிரம் முதல் 8 லட்சம் ரூபாய் வரை உயர்த்த உள்துறை அமைச்சகம் முன்மொழிந்துள்ளது. இதனால், விரைவில் ஃபேன்சி நம்பர்களுக்கான கட்டணம் இரு மடங்கு உயரும். இதற்கான அரசாணை விரைவில் வெளியாக உள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, முதல் 4 தொடர்களுக்கு ஃபேன்சி நம்பராக பெற விரும்புபவர்கள் இதுவரை ரூ.40 ஆயிரம் செலுத்தி இருந்தால் இனிமேல் ரூ.80 ஆயிரம் செலுத்த வேண்டியதிருக்கும். 5 முதல் 8 வரையிலான தொடர்களுக்கு கட்டணம் ரூ.60 ஆயிரத்தில் இருந்து ரூ.1.2 லட்சம் ஆகவும், 9 முதல் 10 வரை எண்களுக்கு கட்டணம் ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாகவும் உயர்கிறது. 11 முதல் 12 வரையிலான தொடர்களுக்கு ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.4 லட்சமாக உயர்கிறது.



Trending News

Latest News

You May Like