வணிக வரித்துறை துணை ஆணையர் சடலமாக மீட்பு..!
வணிக வரித்துறை துணை ஆணையர் சடலமாக மீட்பு
தமிழ்நாடு வணிக வரித்துறை துணை ஆணையரின் உடல் போரூர் ஏரியில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
துணை ஆணையரின் உடல் சென்னை போரூர் ஏரியில் இருந்து மீட்கப்பட்ட நிலையில், அவர் தற்கொலை செய்துகொண்டாரா? தற்கொலைக்கான காரணம் என்ன? பணிச்சுமையா? கடன் தொல்லையா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
போரூரில் வசித்து வந்த செந்தில்வேல் செங்கல்பட்டு வணிக வரித்துறை அலுவலகத்தில் துணை ஆணையராக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில், வணிக வரித்துறை அதிகாரி செந்தில்வேலை காணவில்லை என்று உறவினர்கள் புகார் அளித்திருந்த நிலையல், அவரது உடல் போரூர் ஏரியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வணிக வரித்துறை துணை ஆணையரின் உடல் போரூர் ஏரியிலிருந்து மீட்கப்பட்டு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைக்கப்படவிருக்கிறது. விசாரணைக்குப் பின்பே அவரது தற்கொலைக்கான காரணம் தெரிய வரும் என்று கூறப்படுகிறது.