லியோ படத்தில் விஜயின் மகனாக நடித்தவரின் வீட்டில் ஏற்பட்ட சோகம்..!
நடிகர் மேத்யூ தாமஸ் தமிழில் விஜய் நடிப்பில் வெளியான 'லியோ' படத்தில் விஜய்க்கு மகனாக நடித்திருப்பார். மலையாளத்தில் 'கும்பளங்கி நைட்ஸ்', 'ஒன்', 'ஜோ அன் ஜோ', 'நெய்மர்', 'பேமிலி', 'பிரேமலு' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' என்ற படத்திலும் நடிக்கிறார்.
இந்நிலையில், மலையாள இளம் நடிகர் மேத்யூ தாமஸின் குடும்பத்தை சோகத்தில் உலுக்கிய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
அவரது பெற்றோர் பயணித்த ஜீப் வாகனம் விபத்துக்குள்ளானது. இதில், மேத்யூவின் நெருங்கிய உறவினர் பினா டேனியல் விபத்தில் உயிரிழந்தார். அவரது பெற்றோர் காயங்களுடன் உயிர் தப்பினர். சாஸ்தாமுகில் நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த போது கட்டுமானத்தில் இருந்த கால்வாய் பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்தது..
தற்போது, அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படுகிறது.