லிஃப்ட் கொடுப்பதாக கூறி பாலியல் வன்கொடுமை!!
லிஃப்ட் கொடுப்பதாக கூறி இளம்பெண் ஒருவரை டாக்சி டிரைவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சண்டீகரை சேர்ந்த இளம்பெண் ஒருவர் டேராடூன் சென்றுவிட்டு திரும்பியுள்ளார். அவரது தோழி அவரை சிம்லா புறவழிச் சாலையில் இறக்கி விட்டுச் சென்றுள்ளார். அங்கே அந்த பெண் பேருந்துக்காக நின்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியே வந்த டாக்சி ஓட்டுநர் லிஃப்ட் வேண்டுமா எனக்கேட்டுள்ளார். அந்த இளம்பெண்ணும் டாக்சியில் ஏறிக்கொண்டார். பின்னர் அந்த பெண் கூறிய இடத்தையும் கடந்து டாக்சி சென்று கொண்டிருந்தது.
பின்னர் ஒரு காட்டுப்பகுதிக்கு சென்ற டாக்சி ஓட்டுநர், அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தார். அதைத்தொடர்ந்து, பெண்ணின் பணம், மொபைல் போன் உள்ளிட்டவையை எடுத்துக்கொண்டு, அங்கிருந்து தப்பிச்சென்றார்.
விடிந்த பிறகு காட்டுக்குள் இருந்து வெளியே வந்த அந்த பெண், நடந்தவற்றை தன் தோழியிடம் கூறி அழுதுள்ளார். அதிர்ச்சி அடைந்த பெண்ணின் தோழி சம்பவம் குறித்து காவல் நிலைத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் அந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் டாக்சியின் எண்ணை கண்டறிந்தனர். அதன்பேரில் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
அதில், குற்றச்செயலில் ஈடுபட்டவர் உத்தரப்பிரதேச மாநிலம் பீஹாரி நகர் கிராமத்தைச் சேர்ந்த மணிஷ் குமார் என்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அந்த நபரை கைது செய்து போலீஸார் சிறையில் அடைத்தனர்.
newstm.in