1. Home
  2. தமிழ்நாடு

ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி.. வெளிநாட்டு பயணச் செலவு அதிகமாகும்..!

ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி.. வெளிநாட்டு பயணச் செலவு அதிகமாகும்..!

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத கடும் வீழ்ச்சியை அடைந்துள்ளது. இந்திய ரூபாய் மதிப்பு சரிவால் வெளிநாட்டுப் பயணச் செலவு அதிகமாகும் அபாயம் உள்ளது.

அந்நிய செலாவணி வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு தொடர்ந்து இதுவரை இல்லாத அளவு வீழ்ச்சி அடைந்து வருகிறது. இன்று ஆரம்ப வர்த்தகத்தில் 16 பைசா சரிந்து டாலரின் மதிப்பு ரூ.82.33 க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.


இதனால் டாலரின் மதிப்பு வலுப்பெற்று இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு சரிந்தது. முந்தைய நாள் முடிவில் டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு முதல்முறையாக ரூ.82 க்கு மேல் சரிந்து ரூ.82.19க்கு வர்த்தகம் செய்யப்பட்டது.

உள்நாட்டு பங்குகளில் எதிர்மறையான போக்கு (பங்குகளின் விலை குறைந்து கொண்டே வருவது) மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகியவை முக்கிய காரணிகளாக இருக்கலாம். இந்திய ரூபாய் மதிப்பு சரிவால் வெளிநாட்டுப் பயணச் செலவு அதிகமாகும் அபாயம் உள்ளது என்று அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

Trending News

Latest News

You May Like