ரூ.2000 நோட்டை மாற்ற போறீங்களா..? எஸ்பிஐ சொன்ன குட் நியூஸ்..!!
ரிசர்வ் வங்கி 2,000 ரூபாய் நோட்டு புழக்கத்தில் இருந்து திரும்பப்பெறப்படுவதாகவும் 2,000 ரூபாய் நோட்டுகள் வைத்திருப்போர் அவற்றை இன்று 23-ந் தேதி செவ்வாய்க்கிழமை முதல் வங்கிகளில் செலுத்தி மாற்றிக்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் ரூ.2000 நோட்டுகளை மாற்ற பொதுமக்கள் எந்த அடையாள சான்றையும் சமர்ப்பிக்க தேவையில்லை என்று பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது. பொதுமக்கள் எந்த படிவத்தையும் நிரப்பவோ அடையாள ஆவணம் தரவோ வேண்டியதில்லை என்று பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது. மேலும் பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் இன்றி நோட்டுக்களை மாற்றுவது தொடர்பான பணிகளை மேற்கொள்ளுமாறு பாரத ஸ்டேட் வங்கி அறிவுரை வழங்கியுள்ளது.
எனினும், ஒரே நேரத்தில் 20,000 ரூபாய் வரம்பு வரையில் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு மட்டுமே அடையாள சான்று, படிவம் தேவை இல்லை என எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது. இதுகுறித்து தனது மண்டல அலுவலகங்களுக்கு எஸ்பிஐ உத்தரவு அனுப்பியுள்ளது.
மக்கள் தங்களிடம் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்வதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்யும்படியும், மக்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும்படியும் எஸ்பிஐ தனது அலுவலகங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.