ரஜினி வீட்டு கொள்ளையில் வெளியான பகீர் தகவல்!!
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் கொள்ளை அடித்த நகைகளை வைத்து பணிப்பெண் சொந்தமாக வீடு கட்டி அதனை வாடகைக்கு விட்டிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
தனது வீட்டின் லாக்கரில் இருந்த சுமார் 70 சவரன் தங்க, வைர நகைகளை காணவில்லை என்று ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த லாக்கரின் சாவி தன் வீட்டில் வேலை செய்பவர்களுக்கும் தெரியும் என்று கூறியிருந்தார்.
வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் வீட்டு வேலையாட்களை விசாரித்தனர். அதில் பணிப்பெண் ஈஸ்வரி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. திருடிய நகைகளை வைத்து அவர் சொந்தமாக நிலம் ஒன்றை வாங்கியதும் கண்டு பிடிக்கப்பட்டது.
ஈஸ்வரி பல வருடங்களாக இவர்களிடம் வேலை பார்த்து வந்துள்ளார். 2019 முதலே லாக்கரில் இருந்த நகைகளைத் திருடி வந்த ஈஸ்வரி, மொத்த நகைகளையும் விற்று தனது கணவர் அங்கமுத்துவின் வங்கி கணக்கில் செலுத்தி வந்துள்ளார்.
மேலும் அந்த பணத்தை வைத்து சொந்தமாக நிலம் வாங்கியுள்ளார். இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன் திடீரென வேலையை விட்டு நின்றுவிட்டார்.
இந்த திருட்டுக்கு ஓட்டுநர் வெங்கட் துணையாக இருந்துள்ளார். திருடிய நகைகளை விற்று நிலம் வாங்கியதோடு மட்டுமின்றி, துரைப்பாக்கத்தில் சொந்தமாக வீடு வாங்கி அதனை வாடகைக்கும் விட்டுள்ளார். இதையடுத்து பணி பெண் ஈஸ்வரியை கைது செய்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
newstm.in