முஸ்லிம் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கான பணி நேரத்தை மாற்ற முடிவு..!!
பீகார் மாநில அரசின் பொது நிர்வாகத் துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்,
முஸ்லிம் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ரம்ஜான் மாதத்தில் வழக்கமான பணி நேரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக அலுவலகம் வந்து வேலை முடியும் நேரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக அலுவலகத்தை விட்டு வெளியேற அரசு அனுமதி வழங்கியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ரம்ஜான் மாதத்தில் இந்த உத்தரவு நிரந்தரமாக அமலுக்கு வரும் என்றும் அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சுற்றறிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக பா.ஜ.க. தலைவர் அரவிந்த் குமார், சைதி நவராத்ரி மற்றும் ராமநவமி பண்டிகையின் போது இந்து ஊழியர்களுக்கும் இதே போன்ற சுற்றறிக்கையை பீகார் அரசு வெளியிட வேண்டும் என்று கோரியுள்ளார். இதற்கிடையில், ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் இந்த நடவடிக்கையை வரவேற்றுள்ளன.