மும்பைக்கு வந்த தென் கொரிய பெண்ணிடம் சில்மிஷம் செய்த வாலிபர்கள்..அதுவும் லைவ் ஸ்ட்ரீமில்..!!
தென் கொரியா நாட்டைச் சேர்ந்த மியோச்சி என்ற யூடியூப் பிரபலம் இந்தியா வந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் இரவு மும்பையில் ஒரு பரபரப்பான தெருவில் நேரடி ஒளிபரப்பு செய்து கொண்டிருந்தார். அப்போது இரு இளைஞர்கள் பைக்கில் லிப்ட் கொடுப்பது போல் அவரது கையைப் பிடித்து வலுக்கட்டாயமாக இழுத்தனர். மியோச்ச் அவர்களிடம் நோ நோ என்று கூறுகிறார்.
இதற்கிடையில் அவர்களில் ஒருவர் அவளை முத்தமிட முயன்றார். இளைஞர்களின் பிடியில் இருந்து தப்பிக்க முயன்றும் அவர் விடவில்லை. அவர்கள் அவளைப் பின்தொடர்ந்து வாகனத்தில் ஏறும்படி வற்புறுத்தினார்கள். அவள் எனது வீடு பக்கத்தில் தான் என்று சொன்னபோதும் கேட்கவில்லை. இந்த சம்பவத்தின் வீடியோவை மியோச்சி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
லைவ் ஸ்ட்ரீம் பண்ணும்போது 2 நபர்கள் என்னைத் துன்புறுத்தினார்கள். நிலைமையை மோசமாக்காமல் அதிலிருந்து விடுபட நான் என்னால் முடிந்தவரை முயற்சித்தேன். நான் தெருக்களில் நேரடி ஒளிபரப்பு செய்யவது குறித்து இந்தச் சம்பவம் என்னை யோசிக்க வைத்து உள்ளது என கூறியுள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதால், மும்பை போலீசார் 'நீங்கள் கூறியதை நாங்கள் பரிசீலிப்போம்.. நீங்கள் நேரடியாக எங்களுக்கு தகவல் அனுப்புங்கள்' என்று ட்வீட் செய்துள்ளனர். இதற்கு பதிலளித்த மியோச்சி.. உங்களுக்கு தகவல் அனுப்ப வழி தெரியவில்லை. நீங்கள் நேரடியாக செய்தி அனுப்புங்கள். அதன் அடிப்படையில் நான் உங்களுக்கு தேவையான தகவல்களை தர முடியும் என கூறினார்.
இந்த சம்பவம் கர் காவல் நிலையத்தில் நடந்ததால் போலீசார் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மொபின் சந்த் முகமது ஷேக் (19) மற்றும் முகமது நகிப் சதாரைலம் அன்சாரி (20) என அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
இது குறித்து தென் கொரிய யூட்யூபர் மியோச்சி கூறியதாவது:-
மற்ற நாட்டிலும் இது போன்ற மோசமான அனுபவம் நடந்த போது என்னால் போலிசை அழைக்க முடியவில்லை. ஆனால் இந்தியாவில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் நீண்ட காலம் தங்க திட்டமிட்டுள்ளேன் என மியோச்சி நெகிழ்ச்சி அடைந்துள்ளார்.