1. Home
  2. தமிழ்நாடு

முன்னாள் போப் உடல்நலக்குறைவால் காலமானார்..!!

முன்னாள் போப் உடல்நலக்குறைவால் காலமானார்..!!

1972-ம் ஆண்டு ஜெர்மனியின் பவேரியா மாகாணத்தில் உள்ள மார்க்டி கிராமத்தில் பிறந்தவர் பெனடிக்ட். இவரது இயற்பெயர் ஜோசப் அலாய்சியஸ் ரட்சிங்கர். கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தில் தீவிர ஈடுபாடு கொண்ட இவர், அந்த மதத்தின் முக்கிய பொறுப்புகள் பலவற்றை வகித்தவர். 78 வயதில் 2005-ம் ஆண்டு போப்பாக பதவியேற்ற அவர், மிக அதிக வயதில் போப்பாக தேர்வானவர்களில் ஒருவரானார்.


முன்னாள் போப் உடல்நலக்குறைவால் காலமானார்..!!

சுமார் 8 ஆண்டுகள் போப் ஆக இருந்த பெனடிக்ட், வயது முதிர்வு காரணமாக தனது பதவியை கடந்த 2013-ம் ஆண்டு பிப்ரவரி 28-ம் தேதி ராஜினமா செய்தார். போப் பதவியை ராஜினாமா செய்த இரண்டாவது நபராக இவர் அறியப்படுகிறார்.

அதன்பின் அவர் வாட்டிகனில் உள்ள குருமடத்தில் தங்கி ஓய்வெடுத்து வந்தார். 95 வயதாகும் அவருக்கு கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதற்காக வாடிகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த ஓய்வுபெற்ற போப் 16ம் பெனடிக்ட்டின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

இந்நிலையில், முன்னாள் போப் ஆண்டவர் 16ம் பெனடிக்ட் சிகிச்சை பலனின்றி காலமானார். இதுகுறித்து வாடிகன் செய்தித் தொடர்பாளர் மேட்டியோ புரூனி வெளியிட்டுள்ள அறிக்கையில், “போப் ஆண்டவர் 16-ம் பெனடிக் நேற்று காலை 9.34 மணிக்கு வாட்டிகனில் உள்ள மேட்டர் எக்லேசியா மடாலயத்தில் காலமானார் என்பதை வேதனையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தது.


Trending News

Latest News

You May Like