1. Home
  2. தமிழ்நாடு

முன்னாள் அமைச்சர் மீது புகார் கூறிய பிரபல நடிகை மருத்துவமனையில் அனுமதி..!!

முன்னாள் அமைச்சர் மீது புகார் கூறிய பிரபல நடிகை மருத்துவமனையில் அனுமதி..!!

நாடோடிகள் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை சாந்தினி. இவர் சமீபத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பாலியல் புகார் அளித்திருந்தார். அந்தப் புகாரில், என்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறிய முன்னாள் அமைச்சர் மணிகண்டன், தன்னை ஏமாற்றிவிட்டார். நாங்கள் இருவரும் ஒரே வீட்டில் கடந்த 5 ஆண்டுகளாகக் கணவன், மனைவியாக வாழ்ந்து வந்தோம். இந்த காலத்தில் மூன்று முறை நான் கருவுற்றேன். என்னைக் கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ய வைத்துவிட்டார்" என்று புகார் அளித்திருந்தார்.

இந்நிலையில் இன்று முன்னாள் அமைச்சர் மணிகண்டன் வீட்டின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போது நடிகை சாந்தினிக்கும் மணிகண்டன் ஆதரவாளர்களுக்கும் ஏற்பட்ட தகராறில் சாந்தினிக்கு காலில் காயம் ஏற்பட்டு மதுரை மாவட்டம் மேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Trending News

Latest News

You May Like