முதல்வர் வீட்டில் சோகம்.. பணியில் இருந்த எஸ்.ஐ மாரடைப்பால் மரணம்..!
முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் உதவி ஆய்வாளர் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
சென்னை, ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்தவர் மனோகர் (59). இவர், சென்னை காவல் துறையில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், நேற்று (டிச.8-ம் தேதி) மதியம் ஆழ்வார்பேட்டை, சித்தரஞ்சன் சாலையில் உள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சக போலீசார் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
உதவி ஆய்வாளர் மனோகரன், மாரடைப்பால் மரணம் அடைந்ததாக போலீசர் தெரிவித்தனர். இந்த குறித்து தேனாம்பேட்டை போலீசார் விசாரனை நடத்தினர். முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் உதவி ஆய்வாளர் மாரடைப்பால் மரணம் அடைந்த சம்பவம், சக காவலர்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.