1. Home
  2. தமிழ்நாடு

முதல்வர் பிறந்த நாள் விழாவில் அமைச்சர் ரோஜா நடனம்..!

முதல்வர் பிறந்த நாள் விழாவில் அமைச்சர் ரோஜா நடனம்..!

ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் 50-வது பிறந்தநாளை முன்னிட்டு திருப்பதியில் உள்ள மகதி கலையரங்கில் 3 நாட்கள் கலாச்சார நிகழ்ச்சிகள் நடக்கிறது.

அதன் தொடக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது. ஆந்திர மாநில துணை முதல்வர் நாராயணசாமி பங்கேற்று குத்து விளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாநில அமைச்சரும் நடிகையுமான ரோஜா பங்கேற்றார்.


அப்போது அவர் பேசுகையில், "முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி பிறந்தநாளையொட்டி பல்வேறு கலைப் போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். நான் திருப்பதியில் பிறந்து வளர்ந்து கலைத் துறையில் சிறந்து விளங்கியதால், இன்று எனக்கு கலைத்துறையில் ஒரு அங்கீகாரம் கிடைத்துள்ளது. கலைத்துறைக்கு சேவை செய்யும் பாக்கியமும் கிடைத்துள்ளது. அது மட்டுமின்றி ஆந்திர அரசியலிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறேன். அமைச்சராக உயர்ந்து மக்களுக்கு சேவை செய்து வருகிறேன்" என்றார்.

நிகழ்ச்சியில் பரதநாட்டியம், குச்சிப்புடி, கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவில் கலந்து கொண்ட தொண்டர்களை உற்சாகப்படுத்தும் விதமாக அமைச்சர் ரோஜாவும் கலைக்குழுவினருடன் நடனமாடினார். இதனைக் கண்ட கட்சி தொண்டர்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்.

Trending News

Latest News

You May Like