1. Home
  2. தமிழ்நாடு

முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்குக்கு முன்னேறியது குஜராத் டைட்டன்ஸ்..!!


நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பவுலிங் தேர்வு செய்தது.

இதன்படி, குஜராத் அணியில் முதலில் களமிறங்கிய சுப்மன் கில் அதிரடியாக விளையாடி பவுண்டரிகளை பறக்கவிட்டு சதமடித்தார். அவருடன் இணைந்து சாய் சுதர்சன் 47 ரன்கள் குவித்தார். முடிவில், குஜராத் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து, 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் களமிறங்கிய ஹைதராபாத் அணி வீரர்கள் தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து வந்தனர்.முடிவில், ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை 34 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 9வது வெற்றியை பதிவு செய்தது குஜராத் அணி. ஐபிஎல் 2023 முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது குஜராத் டைட்டன்ஸ்.

மேலும் முதல் அணியான பிளே ஆப் சுற்றுக்குக்கு முன்னேறியது குஜராத் டைட்டன்ஸ்.




Trending News

Latest News

You May Like