1. Home
  2. தமிழ்நாடு

முதலமைச்சரை விட பணக்காரர்களாக உள்ள அமைச்சர்கள்!...

முதலமைச்சரை விட பணக்காரர்களாக உள்ள அமைச்சர்கள்!...

பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையிலான அமைச்சரவை ஆண்டு இறுதியில் தங்களது சொத்து விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்துள்ளனர்.


பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார், தனது அமைச்சர்கள் அனைவரும் ஆண்டின் கடைசி நாளில் தங்களது சொத்துகள் மற்றும் கடன் விவரங்களை வெளியிட வேண்டும் என்று கூறியிருந்தார். அதன்படி, அவர் உள்பட அனைத்து அமைச்சர்களின் சொத்து மற்றும் கடன் விவரங்கள் பீகார் அரசு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.


அதில், நிதிஷ்குமார் கையில் ரூ.28 ஆயிரத்து 135 ரொக்கமும், வங்கிகளில் ரூ.51 ஆயிரத்து 856-ம் உள்ளது. அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ.16 லட்சத்து 68 ஆயிரம். அசையா சொத்துகள் மதிப்பு ரூ.58 லட்சத்து 85 ஆயிரம். மொத்த சொத்து மதிப்பு ரூ.75 லட்சத்து 53 ஆயிரம்.


முதலமைச்சரை விட பணக்காரர்களாக உள்ள அமைச்சர்கள்!...



ஒரே ஆண்டில் அவரது சொத்து மதிப்பு ரூ.18 ஆயிரம் அதிகரித்துள்ளது. டெல்லியில் துவாரகா பகுதியில் கூட்டுறவு வீட்டுவசதி சங்கத்தில் அவருக்கு ஒரு அடுக்குமாடி குடியிருப்பு வீடு உள்ளது. லாலுபிரசாத் யாதவின் மகனும், துணை முதலமைச்சருமான தேஜஸ்வி யாதவிடம் ரூ.75 ஆயிரம் ரொக்கமும், அவருடைய மனைவி ராஜஸ்ரீயிடம் ரூ.1 லட்சத்து 25 ஆயிரமும் உள்ளது.


முதலமைச்சரை விட பணக்காரர்களாக உள்ள அமைச்சர்கள்!...



லாலுவின் மற்றொரு மகனும், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தேஜ்பிரதாப் யாதவிடம் ரூ.3 கோடியே 20 லட்சம் சொத்து உள்ளது. அமைச்சர்களில் பெரும்பாலானோர் நிதிஷ்குமாரை விட பணக்காரர்களாக உள்ளனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like