1. Home
  2. தமிழ்நாடு

முதலமைச்சரின் எளிமைக்கு குவியும் பாராட்டுக்கள்..!!

முதலமைச்சரின் எளிமைக்கு குவியும் பாராட்டுக்கள்..!!

கேரளாவில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா நடந்தது. இதில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக, கேரள மந்திரி பினராயி விஜயனுடன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

விழா முடிந்ததும், கொச்சி விமான நிலையத்துக்கு மு.க.ஸ்டாலின், சாலை வழியாக பயணம் செய்தார். அப்போது திருப்புனித் துறை என்ற இடத்தில் வரும் போது, அங்கிருந்த 'அன்னபூர்ணா' என்ற சைவ ஓட்டலில் சாப்பிடுவதற்காக சென்றார்.அவருடன், தி.மு.க. நாடாளு மன்றக்குழு தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி., கேரள தி.மு.க. நிர்வாகிகள் டாக்டர் ஜார்ஜ், ரபீக் ஆகியோர் இருந்தனர்.

இது எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் நடந்த நிகழ்வு என்று சொல்லப்படுகிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை பார்த்ததும், ஓட்டலில் இருந்தவர்களும், ஓட்டலில் பணியாற்றியவர்களும் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.சாப்பிட்டுவிட்டு வெளியே வந்த அவருடன் கேரள மக்கள் சிலர் 'செல்பி' எடுத்து மகிழ்ந்தனர். அவர்களுடன் சகஜமாக பேசினார்.

சுமார் 20 நிமிடம் அந்த ஓட்டலில் இருந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து புறப்பட்டு, கொச்சி விமான நிலையத்துக்கு சென்று, விமானம் மூலம் சென்னை திரும்பினார். இதுதொடர்பான வீடியோ காட்சி கேரள செய்தி சேனல்களிலும், சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக மக்களுக்கு மத்தியில் மு.க.ஸ்டாலின் எளிமையாக வந்து சென்றதை கேரள மக்கள் பாராட்டுகிறார்கள்.


Trending News

Latest News

You May Like