1. Home
  2. தமிழ்நாடு

முக்கிய பிரபலம் காலமானார்... முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்..!!

முக்கிய பிரபலம் காலமானார்... முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்..!!

'முண்டாசு கவிஞன்' என்று தமிழ் இலக்கிய உலகம் போற்றும் மகாகவி பாரதியாரின் பேத்தி லலிதா பாரதி வயது முதிர்வு காரணமாக இன்று காலமானார். 94 வயதான இவர் வயது முதிர்வு காரணமாக இன்று காலை 9 மணி அளவில் உயிரிழந்தார். பாரதியைப் போலவே இவரும் தமிழில் புலமைp பெற்றவர். கவிதை மற்றும் நூல்கள் எழுதி பாரதியின் புகழுக்கு பெருமை சேர்த்தவர். இவர், கவிஞர் வாலிக்கு பாரதி விருது வழங்கி கௌரவப்படுத்தினார்.

அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், எழுத்தாளர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

முக்கிய பிரபலம் காலமானார்... முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்..!!

இந்நிலையில், மகாகவி பாரதியாரின் பேத்தி மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். சிறந்த கவிஞரும் இசையாசிரியரும் மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் மகள் வயிற்றுப் பேத்தியுமான லலிதா பாரதி அம்மையார் அவர்கள் இயற்கை எய்தினார் என்றறிந்து மிகவும் வருந்துகிறேன் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

திருமதி. லலிதா பாரதி மறைவால் வாடும் அவர்தம் உறவினர்கள், தமிழார்வலர்கள் உள்ளிட்டோர்க்கு எனது ஆழ்ந்த இரங்கல்” என மாண்புமிகு முதலமைச்சர் திரு. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


Trending News

Latest News

You May Like