1. Home
  2. தமிழ்நாடு

முகக்கவசம் கட்டாயம்… முதல் மாநிலமாக அறிவித்த அமைச்சர்!!

முகக்கவசம் கட்டாயம்… முதல் மாநிலமாக அறிவித்த அமைச்சர்!!

சீனாவில் தற்போது மீண்டும் கொரோனா பரவல் மிக வேகமாக உள்ளது. பி.எப்.7 என்ற வைரஸ் திரிபு வேகம் எடுக்கத்தொடங்கி விட்டது. இந்த வகை கொரோனஆ பரவல் இந்திய மக்களையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதனையடுத்து கொரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு மத்திய சுகாதார அமைச்சகம் மாநில அரசுகளை அறிவுறுத்தி உள்ளது.

தொற்று பரவல் அதிகம் இருக்கும் சீனா, ஜப்பான் உள்ளிட்ட 5 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.


முகக்கவசம் கட்டாயம்… முதல் மாநிலமாக அறிவித்த அமைச்சர்!!


இந்நிலையில் கர்நாடகாவில் மாஸ்க் கட்டாயம் என்று அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கூறியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில அமைச்சர் சுதாகர் பள்ளி, கல்லூரிகள் மற்றும் திரையரங்குகளில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என தெரிவித்தார்.

புது வருடத்திற்கான கொண்டாட்டங்களின்போது, பப், உணவு விடுதிகள் மற்றும் பார்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம். புது வருட கொண்டாட்டங்கள் இரவு ஒரு மணியுடன் முடிவுக்கு வரும் என தெரிவித்துள்ளார்.


முகக்கவசம் கட்டாயம்… முதல் மாநிலமாக அறிவித்த அமைச்சர்!!


யாரும் அச்சப்பட வேண்டியதில்லை என்றும் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தாலே போதுமானது என்று அவர் கூறியுள்ளார். கர்நாடகாவில் விமான நிலையங்களில் வந்திறங்கும் சர்வதேச பயணிகளிடம் ரேண்டம் அடிப்படையில் 2 சதவீத பரிசோதனை செய்யவும் அரசு முடிவு செய்துள்ளது.

போதிய படுக்கைகள், ஆக்சிஜன் விநியோகத்துடன் அனைத்து மாவட்ட மருத்துவமனைகளில் கொரோனா வார்டுகளை திறக்கவும் கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. மத்திய அரசிடம் இருந்து அடுத்த திருத்தியமைக்கப்பட்ட உத்தரவுகள் வரும் வரை இந்த நடவடிக்கையானது தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like