மீண்டும் டெல்லி சென்றார் கவர்னர் ஆர்.என்.ரவி..!!
தமிழக சட்டப்பேரவையில் கடந்த 9-ம் தேதி கவர்னர் உரையின்போது, தமிழக அரசு தயாரித்துக் கொடுத்த அறிக்கையில் இடம்பெற்ற சில பகுதிகளை படிக்காமல் தவிர்த்தது சர்ச்சையானது. கவர்னருக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார். அந்த தீர்மானத்தை முதல்வர் வாசித்துக் கொண்டிருக்கும் போதே, கவர்னர் பேரவையில் இருந்து வெளியேறினார்.
இதைத் தொடர்ந்து, இந்த நிகழ்வு தொடர்பாக தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, தி.மு.க. நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர். பாலு, தி.மு.க. எம்.பி.க்கள் வில்சன், என்.ஆர். இளங்கோ ஆகியோர் அடங்கிய குழுவினர் ஜனாதிபதியை கடந்த 12-ம் தேதி சந்தித்தனர். அப்போது, முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை கொடுத்த அவர்கள், பேரவையில் நடந்த நிகழ்வுகள் குறித்து எடுத்துரைத்தனர். இதையடுத்து, கடந்த 13-ம் தேதி டெல்லி சென்ற கவர்னர் ஆர்.என்.ரவி, 14-ம் தேதி இரவு சென்னை திரும்பினார்.
இந்நிலையில், கவர்னர் ஆர்.என்.ரவி மீண்டும் நேற்று (ஜன.18) காலை டெல்லி சென்றுள்ளார். டெல்லியில் கவர்னர் தமிழக விவகாரம் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசவுள்ளதாக கூறப்படுகிறது.